ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், உக்கரம் ஊராட்சியில் உள்ள கேத்தம்பாளையம் மற்றும் காளிகுளம் பகுதியில் 15ஆவது நிதி குழு மானியம் மூலம் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுக்குடிநீர் இணைப்பு திட்டம் பூமி பூஜை மற்றும் MGNREGS திட்டத்தில் 10 பயனாளிகளுக்கு தலா 9.65 லட்சம் மதிப்பீட்டில் 10 பயனாளிகளுக்கு 96.50 லட்சத்தில் தனிநபர் கிணறு வெட்ட வேலை உத்தரவு உக்கரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் தலைமையில் வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்து சிறப்பித்தார். உடன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சரோஜா செந்தில், சம்பத்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் லோகு, வடிவேல், நந்தினி, அபிமன்யு, சோமசுந்தரம் ஊர் நாயக்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment