தண்ணீர் பிரச்னையை உடனடியாக தீர்க்க கோரி மாவட்ட பேரூராட்சிகள் துறை இணை இயக்குனர் மனு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 November 2022

தண்ணீர் பிரச்னையை உடனடியாக தீர்க்க கோரி மாவட்ட பேரூராட்சிகள் துறை இணை இயக்குனர் மனு.


ஈரோடு மாவட்டம், அரியப்பம்பாளையம் பேரூராட்சி, 7வது வார்டு, ரோஜாநகர் பகுதியில் நிலவிவரும் குடிதண்ணீர் பிரச்சினை குறித்தும் தண்ணீர் பைப் சத்தி- கோபி நெடுஞ்சாலை யைக் கடந்து கொண்டு வருவது பற்றியும், சொசைட்டி வீதியில் பேரூராட்சியால் வெட்டப்பட்ட சாலையை உடனடியாக சரி செய்துதர வேண்டியும் ஈரோடு மாவட்ட பேரூராட்சிகள் துறை இணை இயக்குனர் பொறுப்பு ( திரு.கணேசன்) அவர்களிடம் 7வது வார்டு உறுப்பினர்  திருமதி.சத்யபிரியா சர்குனா மனு வழங்கினார்.

அருகில் அரியப்பம்பாளையம் பேரூராட்சி செயல்அலுவலர் திரு.நாகராஜ் உள்ளார். உடனடியாக நெடுஞ்சாலைத் துறை  உயரதிகாரிகளிடம் பேரூராட்சித்துறை இனைஇயக்குனர் அவர்களும் இது பற்றி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். உடனடியாக குறிப்பிட்ட இடத்துக்கு (என்.பி.டி.எம் அருகே) நேரில்  வந்து பார்வையிட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வரும் திங்கள்கிழமை இரவு தண்ணீர் குழாய் நெடுஞ்சாலையை  கடக்க ரோட்டை வெட்டிக் கொள்ளுமாறு அனுமதி வழங்கியுள்ளனர். அதே போல சொசைட்டி அருகில் பேரூராட்சியால் வெட்டப்பட்ட ரோடும் விரைவில் சீரமைத்துத் தரப்படும் என்று உறுதி கூறியுள்ளனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment