ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் பர்கூர் ஊராட்சி பர்கூர் தட்ட கரை தாமரைக்கரை ஆகிய பகுதிகளில் அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கீழ் 2022-2023 கான்கிரீட் சாலை சாக்கடை வசதி சாலை வசதி மேம்பாட்டு திட்டங்கள் பணியில் செயல்படுத்த அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டது.

மேலும் சுண்டப்பூர் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பர்கூர் காளை மாட்டின் வளர்ச்சி பணிகளை குறித்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார் இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் ஒன்றிய கவுன்சிலர்கள் வார்டு உறுப்பினர்கள் திமுகவின் மாவட்டம் ஒன்றியம் நகரம் ஊராட்சி நிர்வாகிகள் மற்றும்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர். என்.நரசிம்ம மூர்த்தி.
No comments:
Post a Comment