ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E.திருமகன் ஈவெரா, ஈரோடு மின் பகிர்மான வட்டம் (நகரியம்) அலுவலகத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்படும் மின்சார அலகுகளை பார்வையிட்டு உற்பத்தி திறன் மின்பாதை அமைப்புகள் உயர் மின் அழுத்த விநியோக முறைகள் ட்ரான்ஸ்பார்மர்கள் செயல்படும் விதங்கள் ஆகியவற்றை கேட்டறிந்து.

கணினி திரையில் மாநகரத்தின் மின் விநியோக செயல்பாடுகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கி பொதுமக்களுக்கும் வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும் கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்வில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி, ஈரோடு மாவட்ட மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் இந்திராணி, கோட்ட பொறியாளர், மின்சாரத்துறை பொறியாளர்களும் கணினி வல்லுனர்களும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment