சூரம்பட்டிவலசு சாமியப்பா சிலம்பக்கலை பயிற்சி பள்ளி மாணவர்கள் சாதனை. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 November 2022

சூரம்பட்டிவலசு சாமியப்பா சிலம்பக்கலை பயிற்சி பள்ளி மாணவர்கள் சாதனை.


கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள LOYOLA COMPOSITE கல்லூரியில் தேசிய அளவிலான நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து 4000 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட சிலம்பப் போட்டியில் ஈரோடு சூரம்பட்டிவலசு சாமியப்பா சிலம்பக்கலை பயிற்சி பள்ளி தலைமை பயிற்சியாளர் ஈரோடு சிலம்பு சதீஷ் மற்றும் ஈரோடு அன்பு தலைமையில் 20 மாணவர்கள் கலந்து கொண்டு முதல் பரிசான சுழற்கோப்பை 14 மாணவர்களும், இரண்டாம் பரிசு 2 மாணவர்களும், மூன்றாம் பரிசு 4 மாணவர்களும் வென்று தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளனர். 

இப்பெருமைக்கு காரணமான பயிற்சி பள்ளி தலைமை பயிற்சியாளர் ஈரோடு சிலம்பு சதீஷ் அவர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் வெகுவாக பாராட்டினார். உடன் ஈரோடு திமுக மாநகர செயலாளர் சுப்ரமணியம், மாமன்ற உறுப்பினர் நந்தகோபு மற்றும் பலர் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment