ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சிக்கரசம்பாளையம் ஊராட்சி, அட்டமொக்கை பகுதியில் AGMT மற்றும் MGNRGS திட்டத்தில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் 12 வீதிகளில் காங்கிரட் சாலை அமைப்பதற்கு சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது.

உடன் வடக்கு சத்தியமங்கலம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.ஏ. தேவராஜ், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் புதுக்குய்யனூர் சுப்பிரமணியம், மற்றும் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சி.ஆர். செல்வராஜ், சேகர், தாசரி பாளையம் ரமேஷ், கோணமூலை ஊராட்சி மன்ற தலைவரும், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய பொருளாளர் குமரேஷ்(எ) செந்தில்நாதன், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment