ஈரோட்டில் பள்ளி மாணவ, மாணவியர்கள், சார்பாக கண்காட்சி நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 November 2022

ஈரோட்டில் பள்ளி மாணவ, மாணவியர்கள், சார்பாக கண்காட்சி நடைபெற்றது.


ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில்  டிவைன் நர்சரி & பிரைமரி பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் 01ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள்.

இந்நிலையில் சனிக்கிழமை (19/11/2022) பள்ளியில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர்கள் சார்பாக கண்காட்சி நடைபெற்றது, கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் நல்ல பழக்கவழக்கங்கள், உணவு,  சார்ந்த விஷயங்கள் திருவள்ளுவர் மற்றும் திருவள்ளுவராக எழுதப்பட்ட திருக்குறள் போன்ற விஷயங்களையும், காற்று சம்பந்தமான விஷயங்களையும், உயிரினம், இது போன்ற  இயற்கை சம்பந்தமான விஷயங்களை பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் அழகாக கண்காட்சி மூலமாக எடுத்துரைத்தனர்.


கண்காட்சியின் சிறப்பு விருந்தினராக 38 வது வார்டு கவுன்சிலர் திருமதி.மங்கேஸ்வரி புனிதன் அவர்கள் பள்ளியில் நடத்தப்பட்ட கண்காட்சியை துவங்கி வைத்தார், இப்பள்ளி தாளாளர், சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமை வகித்தார், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி அலுவலர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என திரளாக கண்காட்சியில் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு செய்தியாளர் ச.சக்திவேல் மற்றும் ஒளிப்பதிவாளர் பி. சிலம்பரசன்.

No comments:

Post a Comment