ஈரோடு மாவட்டம், ஈரோட்டில் விவசாயிகள் நலன் காக்கும் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு 50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க இலவச மின்சார இணைப்புகளுக்கான உத்தரவுகளை ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E. திருமகன் ஈவெரா ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர், கோட்ட பொறியாளர் மற்றும் மின் துறை சார்ந்த அலுவலர்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment