இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு முகாமில் ரூ.21.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளை சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் பார்வையிட்டார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம் பவானிசாகரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு முகாமில் ரூ.21.00கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளை சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.மஸ்தான் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) லி.மதுபாலன் இ.ஆ.ப, உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர். தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி


No comments:
Post a Comment