ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், இக்கரைநெகமம் ஊராட்சியில் உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட தார் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ, சத்தி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.ஏ.தேவராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் எல்.பி.தர்மலிங்கம், ஈரோடு வடக்கு மாவட்ட துணை செயலாளர் கீதா நடராஜன், இக்கரைநெகமம் ஊராட்சி மன்ற துணை தலைவர் மகேந்திரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.


No comments:
Post a Comment