நம்பியூர் அருகே உள்ள கெட்டிசெவியூர் ஊராட்சியில் பழனி பாதயாத்திரை முருக பக்தர்களுக்கு கோபி முன்னாள் அமைச்சர் நன்கொடை!!. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 December 2022

நம்பியூர் அருகே உள்ள கெட்டிசெவியூர் ஊராட்சியில் பழனி பாதயாத்திரை முருக பக்தர்களுக்கு கோபி முன்னாள் அமைச்சர் நன்கொடை!!.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியம்,  கெட்டிசெவியூர் ஊராட்சியில் உள்ள பள்ளி பாளையம் பழைய மற்றும் புதிய குடியிருப்பு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பழனி பாதை யாத்திரை பக்தர்கள் மாலை அணிந்திருந்தனர்.


கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் கே.ஏ.செங்கோட்டையன் ஆணைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் தம்பி (எ) சுப்பிரமணியம், உத்தரவின் பேரில் கெட்டிசெவியூர் ஊராட்சி மன்ற தலைவர் மகுடேஸ்வரன் முன்னிலையில் பள்ளிபாளையம் பழனி முருக பாதயாத்திரை பக்தர்களுக்கு ரூ.10,000 /-நன்கொடை வழங்கினார்.


மேலும் இந்த நிகழ்ச்சியில் சம்பத்குமார் மற்றும் வார்டு உறுப்பினர் சுமதி ஊர் பொதுமக்கள் முருக பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர்  சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி. 

No comments:

Post a Comment