ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், சாத்தம்பூர் ஸ்ரீ வல்லாள ஈஸ்வரர் (ஆர்.டி.காலேஜ் பின்புறம், ஆர்.டி.ஓ ஆபீஸ் அருகில்) காவேரிக்கரையில் காவேரி ஆரத்தி விழா ஸ்ரீ அகத்தியரின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ வல்லாள ஈஸ்வரர் ஆராதனையும் மற்றும் கோமாதா பூஜையுடன் ஸ்ரீ காவேரி அன்னைக்கு ஆரத்தியும் நடைபெற்றது.
நடைபெற்ற நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்து காவேரிக்கு ஆரத்தி எடுத்து அனைவரும் இறையருளாளும், இயற்கையருளாளும் வாழ்வில் எல்லா வளங்களும் பெற வேண்டுமாய் கேட்டுக் கொண்டார்கள்.
இந்த நிகழ்வு ஒவ்வொரு மாதமும் ஸ்ரீ அகத்தியரின் ஜென்ம நட்சத்திரம் ஆயில்யத்தன்று காவேரி ஆரத்தி நடைபெறும். விழா ஏற்பாடுகளை, தமிழக காவேரி ஆர்த்தி விழா குழு அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.
No comments:
Post a Comment