SDPI கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் - புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 December 2022

SDPI கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் - புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!.


ஈரோடு தெற்கு மாவட்ட SDPI-கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி.பாஷா வரவேற்புரையாற்றினார்.


சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினரும், கோவை மண்டல தலைவருமான K.ராஜா உசேன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் சம்பந்தமாகவும், மாவட்ட துணைத்தலைவர் விடுவிக்கப்பட்டு புதிய மாவட்ட துணைத் தலைவர் மற்றும் கூடுதல் மாவட்ட செயலாளர் தேர்வு சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.


அதன் அடிப்படையில் மாவட்ட துணைத்தலைவராக ஜம்பை.ரபீக், மாவட்ட செயலாளராக க.முனாஃப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இச்செயற்குழு கூட்டத்தில் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் M.ஜமால்தீன், மாவட்ட பொருளாளர் ம.ஃபர்ஹான் அஹமது, ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் H.அபூபக்கர் சித்தீக், தொகுதி செயலாளர் கேபிள்.M.சபீர் அகமது, பவானி தொகுதி தலைவர் H.முஹம்மது ஜாபிர், ஈரோடு மேற்கு தொகுதி செயலாளர் அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாவட்ட செயலாளர் அ.சாகுல் ஹமீது நன்றியுரையாற்றினார்.

No comments:

Post a Comment