ஈரோடு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களிடம் குழந்தை திருமணம், போக்சோ, போதை ஒழிப்பு, மனம் மற்றும் உடல் நலன், இளம் வயது கர்ப்பம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் ஒன்றிய பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.இளங்கோ, சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும், சத்தி நகர திமுக செயலாளர் ஆர்.ஜானகி ராமசாமி, சத்தி நகராட்சி துணை தலைவர் ஆர்.நடராஜ், கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் மற்றும் சிறப்பு அழைப்பாளர் மாநில மகளிர் ஆணைய உறுப்பினரும், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் கீதா நடராஜன் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.


No comments:
Post a Comment