சத்தியமங்கலத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி ஐம்பெரும் விழா! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 December 2022

சத்தியமங்கலத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி ஐம்பெரும் விழா!


ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக ஆசிரியர்களின் கூட்டணி ஐம்பெரும் விழா அகில இந்திய செயலாளர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டம் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்பு அகில இந்திய செயலாளர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின்போது ஜார்கண்ட், பஞ்சாப், ஆந்திரா உட்பட ஆறு மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என தேர்தல் அறிக்கை திமுக அரசு அறிவித்து இது வரை கொண்டு வரப்பட்டவில்லை.

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் 7000 பேர் நியமிக்கப்பட்டு 7500 ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த ஐந்து மாத காலமாக அவர்களுக்கு வழங்கப்படவில்லை இது வேதனை அளிக்கிறது.


தமிழகத்தில் கல்வியில் முதல் மாநிலமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அறிவித்த தமிழக முதல்வர் தமிழகத்தில் 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது அதை நிறப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கற்பித்தல் பணியை தவிர கலைநிகழ்ச்சிகள் பயிற்சி வகுப்புகள் நடத்துங்கள் என ஐஏஎஸ் அதிகாரிகளிடம் ஆட்சியை கொடுத்து விட்டு தமிழக முதல்வர் கட்சி பணிகள் கலை நிகழ்ச்சிகள் என மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். 


அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு ஜனவரி மாதம் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை, இதனால் வாக்கு வங்கிகள் சிதரப்பட்டு வருகிறது என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என செய்தியாளர் சந்திப்பின்போது பேட்டியளித்துள்ளார். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment