ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பேரூர் கழகத்தின் சார்பில் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு நிறைவு மற்றும் திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பவானிசாகர் பேரூர் கழக செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் தலைமை கழக பேச்சாளர் ஆரணி மாலா பவானி கண்ணன், மாநில மகளிர் ஆணைய உறுப்பினரும், ஈரோடு மாவட்ட துணை செயலாளர் கீதா நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் ஆறுச்சாமி, பவானிசாகர் பேரூர் கழக அவைத்தலைவர் அம்மாசை ஆகியோர் கலந்துகொண்டு திமுக அரசின் சாதனை குறித்து விளக்கிப் பேசினார்கள்.
மேலும் இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டுள்ளார்கள்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment