சத்தியமங்கலம் வனக்கோட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் செய்தி வெளியீடு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 31 December 2022

சத்தியமங்கலம் வனக்கோட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் செய்தி வெளியீடு.


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 2013-ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இது 1408.405 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இக்காப்பகத்தில், 2018- ம் ஆண்டு நடத்திய அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பில் புலிகள் எண்ணிக்கை 83.2018-ம் ஆண்டு சிறந்த மேலாண்மைக்கான தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விருதும், கடந்த பத்தாண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையினை இரட்டிப்பாக்கியமைக்காக 2021-ம் ஆண்டு உலக அளவிலான TX2 விருதும் பெறப்பட்டது. மேலும் 2021-ம் ஆண்டு Global Conservation Assured Tiger Standards (CAITS) அமைப்பின் அங்கீகாரம் பெறப்பட்டது.

இந்நிலையில் சத்தியமங்கலம் வனகோட்டத்திற்கு TVS Motor நிறுவனத்தின் ஸ்ரினிவாசன் சேவை அறக்கட்டளையின் சார்பில் புதிய சிற்றுந்து (TATA  Starbus) சூழல் சுற்றுலா மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின்  பார்வையிட வருகைதரும் சூழல் சுற்றுலா பயனாளிகளுக்கு பயன்படும் வகையில் இந்த புதிய வாகனம் சூழல் சுற்றுலா பயன்பாட்டிற்கு சி.கே.ஸ்ரிதரன்.  இ.வ.ப. முதன்மை தலைமை வனபாதுகாவலர்  (ஓய்வு), துணை இயக்குநர், ரா.கிருபாசங்கர், சத்தியமங்கலம் வனக்கோட்டம் மற்றும் துணை இயக்குநர் வனக்கோட்டம் ஆசனூர் ஆகியோர் முன்னிலையில் துவங்கி வைக்கப்பட்டது.  


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment