ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர் ஆலோசனை மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார். பவானி வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் பி.ஆர்.தட்சிணா மூர்த்தி தலைமை தாங்கினார்.
ஒன்றிய திமுக செயலாளர் பவானி கே.ஏ.சேகர் வரவேற்புரை ஆற்றினார். பவானி தெற்கு ஒன்றிய செயலாளர் கே.பி. துரைராஜ் ஆலோசனை வழங்கினார். பவானி வடக்கு ஒன்றிய துணை செயலாளர்கள் திரு டி எஸ். சுரேஷ்குமார் நன்றியுரை ஆற்றினார்.
கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.


No comments:
Post a Comment