ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் அவர்களின் 35-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அனைத்து கிளைக் கழகங்களிலும் புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்., அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

எம்.ஜி.ஆர் நகரில் கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன். தலைமையில் புரட்சி தலைவர் எம்.ஜி ஆர் அவர்களின் திருஉருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. உடன் ஊராட்சி மன்ற துணை தலைவர் ரமேஷ், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், வடிவேலு, விக்னேஸ்வரி சுப்ரமணியம், ராசு, மற்றும் யுவராஜ், ரங்கசாமி, சண்முகம், வெங்கடேஷ், அன்பழகன், செல்வம் மற்றும் இளைஞரணி, மகளிரணி,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் . தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.


No comments:
Post a Comment