ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக காஞ்சிக்கோயில் செல்லலாம். இப்பகுதியில் சுமார் 5000 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறார்கள். அனுதினமும் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் இரு சக்கர வாகன ஓட்டிகள், அரசு மற்றும் தனியார் போக்குவரத்து பேருந்துகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இந்த கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையினை கடக்க நொடிக்கு நொடி மிகவும் உயிர் பயத்துடன் சென்று வருகின்றனர். ஏனென்றால் அடிக்கடி இந்த கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையினை கடக்கும் போது விபத்து ஏற்படுவதாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றனர்.
உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நோயாளிகள் சிகிச்சைகாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர ஊர்தியில் மருத்துவமனை செல்ல கூட இந்த கோவை சேலம் நெடுஞ்சாலை கடக்க குறைந்த பட்சம் பத்து நிமிடங்கள் ஆகிறது என்பது மிகவும் மனவேதனை அளிப்பதாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஈரோடு மாவட்டம் நசியனூர் பேரூராட்சி பகுதியில் உள்ள சாமிக்கவுண்டம்பாளையம் பிரிவான சேலம் டூ கோவை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையான (NH47)ல் சாலையினை கடக்கும் போது அடிக்கடி விபத்துகள் நாள்தோறும் ஏற்பட்டு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கடந்த வாரம் காலையில்( 19-12-22) ஆம் நாள் திங்களன்று 6- 53 மணியளவில் ஏற்பட்ட (சாமிக்கவுண்டம்பாளையம்) சாலையைக் கடக்கும் போது மேற்கண்ட ஊரைச் சேர்ந்த கோயில் பூசாரி முத்து மற்றும் அவரது சகோதரி ஆகிய இருவரும் கோர விபத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே மரணம் அடைந்து விட்டார்கள். இது போல் பல விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
மேற்கண்ட இடத்தில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு தேசிய நெடுஞ்சாலை பிரிவை அடைத்து நெடுஞ்சாலையின் பக்கவாட்டில் உள்ள சைடு ரோடான சர்வீஸ் ரோட்டை புதுப்பித்து நசியனூர் டூ திங்களூர் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே சர்வீஸ் ரோட்டை இணைத்தால் இனி வரும் காலங்களில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்பதாகும். எனவே விபத்துகள் நிகழாவண்ணம் தடுக்க இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நீண்ட கால கோரிக்கையான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் விரைந்து மேம்பாலம் அமைக்க வேண்டுமாறு ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்கள் நடப்பு மக்களவை கூட்டத்தொடரில் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்பதே இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்கம் கோரிக்கையாக உள்ளது.

No comments:
Post a Comment