விழாவிற்கு வந்தவர்களை அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் கிருத்திகா சிவ்குமார் வரவேற்றார். இந்தியன் பப்ளிக் பள்ளியின் நிர்வாக இயக்குனர் சிவகுமார் சின்னசாமி அவர்களும், பா.ஜ.க தெற்கு மாவட்ட தலைவர் திரு. வேதனந்தம் அவர்களும் முன்னிலை வகித்தார்கள்.

நிகழ்ச்சியில் அஇஅதிமுக மொடக்குறிச்சி ஒன்றிய குழு தலைவர் கணபதி, ஒன்றியக் குழு துணை தலைவர் மயில், மண்டல் தலைவர்கள் திரு. ரெயின்போ கணபதி, திரு. சிவக்குமார், திரு. டெக்கான் பிரகாஷ், திரு.செந்தில்குமார், திரு. வக்கீல் கார்த்திகேயன், மொடக்குறிச்சி பேரூராட்சியின் வார்டு உறுப்பினர்கள் திருமதி. சத்யா தேவி சிவசங்கர் மற்றும் திருமதி செல்வி இளங்கோ, ஓ. பி. சி அணியின் மாநிலத் துணைத் தலைவர் திரு. அசோக் குமார், விவசாய அணியின் சிறப்பு அழைப்பாளர் திரு. பாலகுமார், பாஜக மாவட்ட, மண்டல் நிர்வாகிகளும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும், அஇஅதிமுக மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கதிர்வேல் அவர்களும், பேட்டை சின்னசாமி அவர்களும், உள்ளூர் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


No comments:
Post a Comment