அதன்படி சி.எஸ்.ஐ. ஆக்கிரமிப்பில் உள்ள 12.66 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு நிலம் என்றும் 80 அடி திட்டச்சாலையை அமைத்திட தமிழக அரசு தலைமை செயலருக்கு உத்தரவிட்டும் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பையொட்டி 17.12.2022 ல் பரிமளம் மஹாலில் வெற்றிவிழா நிகழ்ச்சியானது நிலமீட்பு இயக்கத் தலைவர். E.R.M.சந்திரசேகர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் நிலமீட்பு இயக்கத்தின் துணைத்தலைவர் கைலாசபதி, பொருளாளர் ராஜ்கண்ணு. பொதுச்செயலாளர் E.R.K. ராஜேஷ்வரன், ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ். ஆலோசனைக்குழு உறுப்பினர் நா.சண்முகசுந்தரம், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பழனிசாமி சென்னை வழக்கறிஞர் ஜெய்கணேஷ் மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் C. சரஸ்வதி, அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர். V.K. ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ண ஜகந்நாதன் இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற வைரவேல் நன்றியுரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
- நல்லதொரு தீரப்பை பெற பெரும் ஒத்துழைப்பு தந்த மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் இந்தக் கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.
- 2.நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி சி.எஸ்.ஐ நிர்வாகம் ஆக்கிரமித்துள்ள 12.66 ஏக்கர் நிலத்தை எவ்வித காலதாமதமும் இன்றி அரசு மீட்டெடுக்க வேண்டும்.
- போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டு நிலுவையில் உள்ள 80 அடிதிட்டச்சாலையை அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும்.
- அரசால் அவ்வப்போது நிர்ணயிக்கப்பட்ட நிலுவையில் உள்ள குத்தகைத் தொகையை வட்டியுடன் சி.எஸ்.ஐ. நிறுவனத்திடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் மக்கள் சக்தியை திரட்டி முற்றுகைப்போராட்டம் உட்பட தொடர் போராட்டங்களை நடத்துவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

No comments:
Post a Comment