
முகாமில் பெண் கல்வி முக்கியத்துவம், பெண்பாதுகாப்பு, போக்சோ சட்டம், இளமைத் திருமணம், பற்றி சார்பு நீதிபதி எடுத்துரைத்தார். உடன் மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிபதி பி.சர்மிளா , சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி டி.பொன்வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கு கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். சரவணன், முன்னிலை பொறுப்பு வகித்தார்.
வழக்கறிஞர்கள் மனோன்மணி, நூர்ஜகான் கலந்து கொண்டு முகாம் செயல்பாடுகள் பற்றி விளக்க உரை ஆற்றினார்கள். முகாமில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரமேஷ், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் சுகுமார், வடிவேலு, வளர்ச்சிக்குழு உறுப்பினர் ராசு, தங்கவேலு மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் ஆர். குமார் செய்திருந்தார். முடிவில் சட்டம் சார்ந்த பிரச்சினைகள் குறித்த மனுக்களை பொது மக்களிடம் சார்பு நீதிபதி பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி


No comments:
Post a Comment