ஈரோடு மாவட்டத்திற்கு முக்கிய சாலையான பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி வரும் சாலையான மஞ்சள் மண்டி அருகே சில நாட்களாக சேதம் அடைந்து இருக்கிறது.
இந்நிலையில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் நிலை தடுமாறி கீழே விழுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் சில சமயம் அங்கு விபத்தும் ஏற்படுகிறது அதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறோம் என்று கூறுகின்றனர்.
இதனால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக சாலையை சீரமைத்து தர கோரி ஈரோடு மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.



No comments:
Post a Comment