அரசு பள்ளிகளுக்கு மேசை மற்றும் இருக்கைகளை வழங்கிய K.C. கருப்பணன் MLA. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 9 December 2022

அரசு பள்ளிகளுக்கு மேசை மற்றும் இருக்கைகளை வழங்கிய K.C. கருப்பணன் MLA.

பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுந்தப்பாடி ஊராட்சி பொம்மன்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மற்றும் கவுந்தப்பாடி புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு மேஜைகள் மற்றும் இருக்கைகளை மாவட்ட கவுன்சிலர் திருமதி. சிவகாமி சரவணன் அவர்களின் நிதியிலிருந்து (₹ 4.12 lakhs) முன்னாள் அமைச்சர் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் K.C. கருப்பணன் MLA., வழங்கினார். 


உடன் பவானி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் M.ஜெகதீசன், ஊராட்சி மன்ற தலைவர் பாவா K.P. தங்கமணி, ஒன்றிய குழு உறுப்பினர் கோமதி ஆறுமுகம், சத்தியபாமா பர்குணன், மருத்துவ அணி செயலாளர் மனோகரன், நல்லி விவேகானந்தன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர், ஒன்றிய மாணவரணி செயலாளர் த செந்தில்குமார், இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் விஜய், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் மணல் சோமு, அமைப்பு சாரா ஓட்டுநர் சங்க ஒன்றிய செயலாளர் தங்கவேலு, வார்டு உறுப்பினர், மிளகாய் சந்திரன், சீனி, முத்துக்கண்ணு, விஜயலட்சுமி, வேலுச்சாமி மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment