ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், நம்பியூர் அருகே உள்ள 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் கருவறை மற்று|ம் அர்த்தமண்டபத்தில் தேவர்கள் குடியிருக்கும் தேவ கோஷ்ட கால் வரி கதவுகல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ஐய்யனார் கோயில் தர்மகர்த்தா லோகு அவர்கள் கலந்து கொண்டார். மேலும் ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலுக்கு கருவறையில் 3 கல்லும் மற்றும் அர்த்தமண்டபத்தில் 2 கல்லும் தேவர்கள் குடியிருக்கும் தேவ கோஷ்ட கால்வரி கதவு கல்லை வடிவமைக்க ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள. கல்லை உபயமாக கோவையை சேர்ந்த தாமரைச்செல்வன் சித்ரா மருத்துவர் அமுல் பிரதாப். மருத்துவர் கீர்த்தன பிரதாப், சுகில் சக்கரவர்த்தி, அமுல் பிரதீப் பழனியம்மாள் குடும்பத்தினர் வழங்கினார். அதைத்தொடர்ந்து ஸ்ரீஐய்யனார் கோயில் அர்த்தமண்டபத்தில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment