இந்த நிலையில் மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விவசாயிகள் கூட்டு பொறுப்பு குழு ஏற்படுத்தி கடன் வழங்க சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தியன் வங்கி சத்தியமங்கலம், சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மலர்கள் விவசாயிகள் சங்க ஏற்பாட்டில் இந்தியன் வங்கி சத்தியமங்கலம் கிளை சார்பில் 500 விவசாயிகளுக்கு ரூ.5 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் 500 பேருக்கு ஐந்து பேர் கொண்ட கூட்டு பொறுப்பு குழுக்கள் ஏற்ப டுத்தி ஒரு விவசாயிக்கு ஒரு லட்சம் வீதம் 500 பேருக்கு ரூ.5கோடி கடனுதவி வழங்கும் இந்தியன் வங்கி சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு விவசா யிகள் 500 பேருக்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1லட்சம் வீதம் ரூ.5 கோடி கடனுதவி வழங்கினர்.
கடன் வழங்கும் விழா நேற்று சத்திய மங்கலம் பூமார்க்கெட்டில் நடைபெற்றது. விழாவிற்கு மலர்கள் விவசாயிகள் சங்க தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ண மூர்த்தி முன்னிலை வகித்தார். இந்தியன் வங்கி சத்தியமங்கலம் கிளை ஆறு மாதத்திற்கு ஒரு முறை கடனை திருப்பி செலுத்தும் வகையில் கட னுதவி வழங்கப்பட்டுள் ளதாக இந்தியன் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இந்த விழாவில் மலர்கள் விவசாயிகள் சங்க துணை தலைவர் வேலுச்சாமி, துணை செயலாளர் தங்கராஜ். பொருளாளர் நாகராஜ் உள்ளிட்ட 500- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை சத்தியமங்கலம் மலர்கள் விவசாய சங்கம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment