தமிழ்நாடு சட்டப்பேரவையில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி துணை கேள்வி நேரத்தின்போது கீழ்க்கண்ட தொகுதி சார்ந்த கோரிக்கையை மாண்புமிகு பேரவைத் தலைவர் மூலமாக துறை அமைச்சர் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பேசியதாவது; மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட எழுமாத்தூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் எழுமாத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகள் படிப்பதற்கு வந்து செல்கின்றனர்.
ஆனால் கல்லூரியில் போதிய வகுப்பறைகள் இல்லாத காரணத்தினால் மாணவ மாணவியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே எழுமாத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு தேவையான வகுப்பறைகளை அமைத்து தர அரசு முன் வருமா என்பதை தங்கள் வாயிலாக துறை அமைச்சர் அவர்களிடம் அறிய விரும்புகிறேன் என்ற சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
- மொடக்குறிச்சி சக்திவேல். ப.
No comments:
Post a Comment