ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், நம்பியூர் அருகே உள்ள சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அத்தி ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் அர்த்தமண்டபத்தில் அஸ்வபாதம் கல் பதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீஐய்யனார் கோயில் தர்மகர்த்தா லோகு டிஜிட்டல் உரிமையாளர் லோகநாதன் கலந்து கொண்டார். மேலும் ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலுக்கு அர்த்தமண்டபத்தில் அஸ்வபாதம் கல்லை வடிவமைக்க 30,000 ஆயிரம் மதிப்புள்ள கல்லை உபயாமாக பண்ணாரி அம்மன் கேபிள் உரிமையாளர் எலத்தூர் கரட்டுபாளையம் கதிர்வேல் வழங்கினார். அதைத் தொடர்ந்து அய்யனார் கோயில் அர்த்தமண்டபத்தில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment