இந்நிகழ்வின்போது மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, மாண்புமிகு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. சு. முத்துசாமி, மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.மா. மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி கனிமொழி, திரு அந்தியூர் ப.செல்வராஜ், திரு. அ.கணேசமூர்த்தி, திரு.விஜய் வசந்த், திரு.எ.செல்லகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஏ.ஜி.வெங்கடாசலம், திரு. செல்வபெருந்தகை, ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இ.ஆ.ப., ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி. நாகரத்தினம் சுப்பிரமணி, துணை மேயர் திரு.வே.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.1.2023) ஒன்றிய முன்னாள் அமைச்சர் திரு.ஈவிகேஎஸ். இளங்கோவன் அவர்களின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான திரு. திருமகன் ஈ.வெ.ரா. அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்ததையொட்டி, ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
No comments:
Post a Comment