கோபி மின்வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் சார்பில் பேரவை கூட்டம்!. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 January 2023

கோபி மின்வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் சார்பில் பேரவை கூட்டம்!.

ஈரோடு மாவட்டம் - கோபிசெட்டிபாளையம் பி.ஜி.6.கோபி மின்வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் சார்பில் கோபி பெரியார் திடல் பின்புறம் உள்ள அலுவலகத்தில் பேரவை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோபி மின் வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் லோகநாதன் மற்றும் செயலாளர் பாலமுருகன் மற்றும் துணை தலைவர் ஜெயமணி முன்னிலை வகித்தனர். மேலும் கூட்டத்தில் 2021-2022ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையை வாசித்தனர். 2021-2022இறுதித் தணிக்கை அறிக்கை படி ஈட்டிய நிகர லாபத்தின் சங்க துணை விதிகளின் படி பிரிவினை செய்தல் மற்றும் 2023 -2024-வருடத்தின் உத்தேச வரவு செலவு திட்டத்தின் ஏற்று அங்கீகரித்தல் ரூ100 கீழ்உள்ள உறுப்பினர்கள் பங்குத் தொகையை அறிவிப்பு கொடுத்து 31.03.2023 மாற்றிக் கொள்ளவும் அறிவிக்கப்பட்டது.


மாற்றம் செய்த உறுப்பினர்கள் பங்குத் தொகையை உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் எனவும் நீண்ட காலமாக பெறாமல் நிலுவையில் உள்ள உறுப்பினர்களின் பங்கு ஈவுத் தொகையை உரிய அறிவிப்பு கொடுத்து பெற்றுக் கொள்ளவும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கோரப்படாத தொகையை எதுவும் நிலுவையில் இல்லாமல் குறிப்பிட்ட தேதிக்குள் கொண்டு செல்லவும் என சில முக்கிய முடிவுகளை பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.


பேரவை கூட்டத்தில் நிர்வாக குழு உறுப்பினர்கள் பத்மினி, கலைவாணி, முருகன், லோகநாதன், அசோக்குமார், ராஜேந்திரன், சிவகுமார், சக்திவேல் முருகேசன் சங்கப் பணியாளர்கள் மைதிலி, சந்திரன் மற்றும் மின் வாரிய பணியாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரவை கூட்டத்தின் இறுதியில் அனைவருக்கும் இந்த ஆண்டுக்கான மின்வாரிய பெயர் அச்சிடப்பட்ட  பை வழங்கப்பட்டது. 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி. 

No comments:

Post a Comment