கொடுமுடி ஒன்றியம் ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத்திடலில் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் மேம்பாட்டு அமைப்பான நேரு யுவகேந்திரா, கொடுமுடி கலைமகள் யூத் கிளப் இணைந்து கொடுமுடி வட்டார அளவில் பதினாறில் இருந்து முப்பத்து ஐந்து வயதினருக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர்.
இதில் கபடி, வாலிபால், 100, 200, 400மீட்டர் ஓட்டப் பந்தயம் போட்டிகள் நடத்தப்பட்டன. கபடி இறுதிப் போட்டியில் கலந்து வெற்றி பெற்ற காசிபாளையம் உதய நிலவு அணி, வாலிபால் இறுதிப் போட்டியில் கலந்து வெற்றி பெற்ற சத்திரப்பட்டி வாலிபால் அணிகள் வெற்றிக் கோப்பயை தட்டி சென்றனர். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு மொடக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.சிவசுப்பிரமணி தலைமை தாங்கி பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் மயில்(எ)சுப் பிரமணி, பேட்டை சின்னு, கொடுமுடி ஒன்றிய குழு உறுப்பினர் பரமசிவம், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் வாசுதேவன், கலைமகள் யூத் கிளப்செயலாளர் எம்.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நேரு யுவகேந்திர அமைப்பை சேர்ந்த அஸ்கிஸ் சஞ்சய் ஷெட்டி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வெங்கடாசலம், ஊஞ்சலூர் பயிரிடுவோர் கூட்டுறவு கடன் சங்க தலைவர் முத்தையன், தகவல் தொழில் நுட்ப பிரிவை சார்ந்த பாபு சங்கர் பிரேம் சிவகிரி தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் கொடுமுடி வட்டாரநேரு யுவகேந்திர அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.பூபதி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment