மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம். கலெக்டர் பங்கேற்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 January 2023

மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம். கலெக்டர் பங்கேற்பு.

சத்தியமங்கலம்,   காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ரூ.13.35 இலட்சம் இணை மானிய நிதி வழங்கி, 20 நபர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி சான்றிதழ்களை வழங்கி, அந்நிறுவனத்தின் புதிய அலுவலகத்தினை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது.

தமிழ்நாடு அரசு மற்றும் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் கிராம பகுதிகளில் வறுமை ஒழிப்பையும் தாண்டி தொழில் நிறுவனங்களை உருவாக்குதல், நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி தருதல் மூலமாக நிரந்தர வளர்ச்சி மற்றும் வளமான வாழ்வு பெற்று கிராமபுற மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துதலை நோக்கமாக கொண்டு ஈரோடு மாவட்டத்தில் பவானி, பவானிசாகர், சென்னிமலை சக்தியமங்கலம், மற்றும் தாளவாடி வட்டாரங்களில் 77 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது.


இம்மாவட்டத்தில் மஞ்சள், வாழை, கரும்பு உள்ளிட்ட முக்கிய விளை பொருட்கள் விளைவிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விவசாயும் ஒவ்வொரு தொழில் முனைவோராக மாற நிறைய வாய்ப்புகள் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மிக சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டு கோடி கணக்கில் வருமானம் ஈட்டக்கூடிய மிக சிறப்பாக செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உள்ளது. சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பெரிய அளவில் வெற்றி அடையும் என நம்பிக்கை உள்ளது. மகளிர் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தற்போது வெற்றி பெற்ற பெரிய தொழிலதிபர்களாக வளர்ந்து வருகின்றனர். 


இதன் மூலம் சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும். இதற்காக அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. உங்கள் தொடர் முயற்சியும், அரசின் வழிகாட்டுதலும் சேர்ந்து பெரிய வெற்றி அடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் மற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு விவசாயத்தையும் மேம்படுத்த முடியும். இந்த ஆண்டு உலக சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டு வருவதையொட்டி, இங்கு சிறுதானிய மதிப்புக்கூட்டுப்பொருட்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்தாகும். மேலும் அனைவருக்கும் தைத்திருநாள், பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். தொடர்ந்து உழவர்  உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகளை கேட்டறிந்து சிறப்பாக செயல்படுவதற்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.


முன்னதாக வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களான நற்பவி செக்கு எண்ணெய், வனமகள் அரப்பு தூள், வாழைப்பழம் சிப்ஸ், ஆவாரம்பூ டீ தூள், வனமகள் ராகி மாவு உள்ளிட்ட 26 வகை பொருட்களை சந்தைக்கு அறிமுகபடுத்தினார்.  4 பயனாளிகளுக்கு இணை மானிய நிதியாக ரூ.13.35 இலட்சம் வழங்கி, சமுதாய தொழில் திறன் பள்ளியில் பயிற்சி நிறைவு செய்த 20 நபர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் மற்றும் 3 பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.


தொடர்ந்து, கொண்டப்பநாயக்கன் பாளையத்தில் வாழந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ், ஆசனூர் லேண்டனா தொழிற் குழுவிற்கு ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட உன்னிக்குச்சிகளை பொடியாக்கி, எரிகட்டி தயாராக்கும் இயந்திரத்தின் சோதனை ஓட்ட செயல்பாட்டினை பார்வையிட்டார். தொடர்ந்து அரியப்பம்பாளையத்தில் சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.


இவ்விழாவில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் தாமோதரன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் மகாதேவன், காமதேனு கல்லூரி  தலைவர் பெருமாள்சாமி,  முதல்வர் செந்தில்குமார், செயலர் அருந்ததி, வேளாண்மை உதவி இயக்குநர் உமாமகேஷ், தோட்டக்கலை உதவி இயக்குநர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்ரமணியன், பிரேம்குமார் உட்பட செயல் அலுவலர்கள், வட்டார அணித்தலைவர்கள், திட்ட செயலர்கள், நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் தொழில்சார் சமூக வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


சத்தியமங்கலத்தில் நடைபெற்ற மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு இணை மானிய நிதி கடன் உதவிகள் வழங்கினார். அருகில் கல்லூரி முதல்வர் பெருமாள்சாமி, சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன் பாளையத்தில் வாழ்ந்து காட்டுவோம் புத்தாக்க நிதி திட்டத்தில் ரூ.16 லட்சம் செலவில் ஆசனூர் லேண்டனா பழங்குடியினர் தொழிற்குழுவிற்கு உன்னி குச்சிகளை பயன்படுத்தி எரி கட்டிகள் தயாரிக்கும் இயந்திரத்தின் சோதனை ஓட்டத்தை பார்வையிட்டார். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment