ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டம், கேர்மாளம் திரு.து.தினேஷ் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியின் போது காப்பு காட்டிற்குள் அந்நிய நபர்கள் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டு எதிரியான கர்நாடகா மாநிலம் உத்தூர் கிராமத்தை சேர்ந்த ராட்சப்பா மகன் சிவா(சுமார் வயது 33) கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் எதிரி பாதுகாக்கப்பட்ட அரசு காப்புக்காடு - புலிகள் காப்பக பகுதியில் சட்ட விரோதமாக நுழைந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து துனை இயக்குநர், ஆசனூர் வனக்கோட்டம் அவர்களின் உத்தரவின்படி எதிரிக்கு ₹1,20,000 இணக்கக்கட்டணம் விதிக்கப்பட்டு வழக்கு முடிவுற்றது.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment