ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிட முடிவு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 January 2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிட முடிவு.


ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வே.ரா அவர்கள் காலமானதை அடுத்து தேர்தல் ஆணையம் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்துவதாக அறிவித்துள்ளது.


இந்த தேர்தலின் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிலைப்பாடு சம்பந்தமான அவசர ஆலோசனைக் கூட்டம் ஈரோடு காவிரி சாலையில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி பாஷா வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கத்தின் மாநில பொருளாளர் ஜே.எம்.ஹசன் பாபு அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.


கடந்த சட்டமன்ற மற்றும்  உள்ளாட்சி தேர்தல்களில் எஸ்.டி.பி.ஐ கட்சி கணிசமான வாக்குகளை ஈரோடு கிழக்கு தொகுதியில் பெற்றுள்ளதையும், பொதுமக்கள், கட்சியின் ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்றும் நடைபெற இருக்கக்கூடிய இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிட வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்று மாநில தலைமை ஒப்புதல் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.


இச்செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் க.முனாப், மாவட்ட பொருளாளர் ம.பர்ஹான் அகமது, எஸ்.டி.டி.யூ மாவட்ட தலைவர் ஆட்டோ.அப்துல் ரகுமான், எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் கேபிள்.சபீர் அகமது, தொகுதி செயலாளர் தளபதி.பசீர், ஈரோடு மேற்கு தொகுதி தலைவர் அப்துல் ரகுமான், செயலாளர் மஸ்தான், பவானி தொகுதி தலைவர் முகமது ஜாபீர் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட செயலாளர் அ.சாகுல் ஹமீது நன்றி உரையாற்றினார்.

No comments:

Post a Comment