ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், ஊஞ்சலூர் பேரூராட்சி, 3 வது வார்டு, அருள்மிகு நாகேஸ்வரர்சுவாமி திருக்கோவில் அருகில், பரிசல் துறை வீதியில் பொது சுகாதார வளாகம் அமைத்திட மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (2022-2023) நிதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் ரூபாய் 11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
நடைபெற்ற நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்துகொண்டு சுகாதார வளாகம் கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஊஞ்சலூர் பேரூராட்சி தலைவர் சசிகலா ராம்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ந.செந்திலன், பாரதிய ஜனதா கட்சியின் கொடுமுடி கிழக்கு ஒன்றிய தலைவர் வக்கீல் T.கார்த்திகேயன், ஒன்றிய பொதுச்செயலாளர் M.அருண், ஒன்றிய செயலாளர் K.N.ஹரிஷ், சென்னசமுத்திரம் பேரூர் தலைவர் காளியப்பன், ஊஞ்சலூர் பேரூர் தலைவர் கோபாலகிருஷ்ணன், வெங்கம்பூர் பேரூர் தலைவர் கோவிந்த், ஆராம்பாளையம் குணசேகர், கருக்கம்பாளையம் கிருஷ்ணசாமி, ஊராட்சி கவுன்சிலர் தர்மலிங்கம், ஊஞ்சலூர் தண்டபாணி, வேலுச்சாமி, மணிகண்டன், ஜோதிடர் ராஜீ, இளைஞர் அணி காசிபாளையம் கோபி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment