அர்த்தமண்டபத்தை இணைக்கும் கும்ப பஞ்சாரம் கல்லானது சுமார் மூன்று லட்சம் மதிப்பில் வடிவமைக் கப்பட்டுள்ளது. கும்ப பஞ்சார கல்லுக்கு ரூ.3 லட்சம் உபயமாக எலத்தூரைச் சார்ந்த சரஸ்வதி கொமரசாமி குடும்பத்தினர் வழங்கினர். இத்திருக்கோவில் ஆனது சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த கோவிலாகும். கோவில் திருப்பணி நான்கு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
நம்பியூர் சுற்றுவட்டார நீர்ப்பிடிப்பு பகுதியான குளத்தின் கரையோரத்தில் மிகவும் இயற்கையின் எழில் மிகு தோற்றத்தில் அமைந்துள்ளது. கோயிலின் சிறப்பு கல்வி, ஞானம் செல்வம், தொழில் வளர்ச்சி தரக்கூடிய ஐய்யனாராக இக்கோயில் திகழ்ந்து வருகிறது.
அத்தி மரத்தில் ஐய்யனாரை சிலையாக செய்து வணங்கி வருகின்றனர். மேலும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் புஷ்பங்கள், எலுமிச்சை கனிகளால் பழங்கால முறைப்படி வாக்கு கேட்கும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. கொங்கு மண்டலத்தில் எங்கும் இல்லா சிறப்பு இத்திருக்கோயில் சிற்பக்கலை மண்டபங்கள் மற்றும் கருவறை மண்டபங்கள் மிகவும் கலை நயத்துடன் பழங்கால முறைப்படி வடிவமைக்கப்பட்ட வருகிறது.
திருக்கோயிலுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஏராளமான பக்தர்கள் வந்து தனது கோரிக்கைகளை மனமுருகி வேண்டி வருகின்றனர். இக்கோயில் நம்பியூரின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment