தமிழகத்திலே ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்ட வீரர்களில் ஒருவரான பாஞ்சாலங்குறிச்சியில் 1760ல் பிறந்த தெலுங்கு மொழி பேசும் கம்பள நாயக்கர் இனத்தைச் சேர்ந்த மாவீரன். வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம். கோபிசெட்டிபாளையம் கிழக்கு ஒன்றியம் கூகலூரில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஏ பி என் கோவிந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நாயக்கமார்களின் சமுதாயகொடியை ஏற்றிவைத்து மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வரலாற்று செய்திகளை குறிப்பிட்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக கோபி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்தினார். அதிமுக கழக அமைப்புச் செயலாளர் மு.சுப்ரமணியம் அந்தியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் வி கே கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் அதிமுக மாவட்ட பிரதிநிதிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள். பேரூர் கிளை கழக நிர்வாகிகள் தொன்டர்கள் மற்றும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தனர். பேரூர் கழக செயலாளர் சக்திவேல் நன்றியுரை ஆற்றினார்.
- மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்ம மூர்த்தி.
No comments:
Post a Comment