ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. புஞ்சை புளியம்பட்டியில் அண்ணாமலையார் கோவில் உள்ளது. மார்கழி திருவாதிரையை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தில்லை கூத்தப்பெருமானுக்கு திருமுழுக்கு நடந்தது.5 மணிக்கு சிறப்பு வழிபாடு, திருக்காட்சி தரிசனத்தை தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. பின்னர், திருவெம்பாவை வழிபாடுகளுடன், மாணிக்கவாசகர்–சிவகாமியம்மை உடனமர் தில்லை அம்பலவாணர், உட்பிரகார மண்டபத்தில் எழுந்தருளினார்.
மாலை 5 மணிக்கு சிவகாமியம்மை உடனமர் தில்லை அம்பலவாணர் உற்சவர், ஆருத்ரா தரிசன திருவீதி உலா, அண்ணாமலையார் கோவிலில் துவங்கியது. முக்கிய வீதிகளை வழியாக சென்று இரவு கோவிலை அடைந்தது.திருவீதி உலாவில் பெண் பக்தர்கள் பங்கேற்ற கோலாட்ட நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment