ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுடி வட்டம், வெங்கம்பூர் பேரூராட்சி, 6 வது வார்டு, கல்வெட்டுப்பாளையம் மெயின் வீதியில் வடிகால் அமைத்திட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் (2022-2023) இருந்து சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. நடைபெற்ற நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்துகொண்டு வடிகால் கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கொடுமுடி கிழக்கு ஒன்றிய தலைவர் வக்கீல் T.கார்த்திகேயன், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் M.அருண் மற்றும் மயில்சாமி, ஒன்றிய துணைத் தலைவர் குப்புசாமி, விவசாய அணி ஒன்றிய செயலாளர் மோகன மூர்த்தி, ஒன்றிய செயலாளர் K.N.ஹரிஷ், தமிழ்மணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், வெங்கம்பூர் பேரூராட்சி கவுன்சிலர் செந்தில் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment