ஈரோட்டில் விறுவிறுப்பு பிரச்சாரத்தை செய்யும் விவசாயி சின்னம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 February 2023

ஈரோட்டில் விறுவிறுப்பு பிரச்சாரத்தை செய்யும் விவசாயி சின்னம்.


ஈரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஈரோடு கிழக்குத் தகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன்,ஈ.வே.ரா., அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார், இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.


அதனால் வருகின்ற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கின்றது, இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, அஇஅதிமுக, தேமுதிக, போன்ற மொத்தம் 77 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிருக்கின்றனர்.


இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான், அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்.திருமதி. மேனகா நவநீதன், அவர்களுக்கு ஈரோட்டில் தீவிர விறுவிறுப்பான வாக்கு சேகரிக்கும்  தேர்தல் பிரச்சாரத்தில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம், தொகுதி கட்சியின்  நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment