ஈரோடு மாவட்டம் ஈரோடு பேருந்து நிலையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து மோப்ப நாய் உதவையுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் கால் வந்ததாகவும் அதில் பேசிய நபர் ஈரோட்டில் பேருந்து நிலையம் ரயில் நிலையம் மற்றும் மணிக்கூண்டு பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளதாக தெரிகிறது இதனை அடுத்து இந்த தகவல் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
தகவலை பெற்றுக் கொண்ட ஈரோடு போலீசார் ஈரோடு பேருந்து நிலையம் ரயில் நிலையம் மணிக்கூண்டு பகுதிகளில் தீவிர வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிராக்டர் உதவியுடனும் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பது உண்மையா என்ன கண்டறிய தீவிர சோதனையில் ஈடுபட்டனர் பின்னர் வெடிகுண்டு எங்கும் இல்லை என்பதை கண்டறிந்த போலீசார் இந்த தகவல் பொய்யானது என முடிவு செய்தனர்.
ஈரோட்டில் முக்கிய இடமாக இருக்கும் பேருந்து நிலையம் ரயில் நிலையம் ஈரோட்டின் மையப் பகுதியான மணிக்கூண்டு போன்ற முக்கிய இடங்களில் வெடிகுண்டு சோதனையை போலீசார் நடத்திய போது பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர் பின்னர் அந்த தகவல் பொய்யானது என தெரிந்த பிறகு போலீசாரம் பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர் இதனால் ஈரோட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் என். நரசிம்ம மூர்த்தி.
No comments:
Post a Comment