மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றுகள் வழங்கினார் அந்தியூர் எம்எல்ஏ. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 10 March 2023

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றுகள் வழங்கினார் அந்தியூர் எம்எல்ஏ.


ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் மகளிர்  சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றுகள் வழங்கினார் அந்தியூர் எம்எல்ஏ மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றுகள் வழங்கினார் அந்தியூர் எம்எல்ஏ.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம்,ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறை சார்பில்,அந்தியூர் K.290தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் மாத்தூர் K.1318 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில்  மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றுகள்  வழங்கி புதிய நியாய விலைக் கடைகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாலம்  எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோபி சரக துணை பதிவாளர் நர்மதா, ஈரோடு பொது வினியோக திட்ட துணை பதிவாளர் கந்தசாமி, அந்தியூர் பேரூராட்சி  தலைவர்  எம்.பாண்டியம்மாள், திமுக பேரூர் கழக செயலாளர் எஸ்.கே.காளிதாஸ்,  பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்  பழனிச்சாமி , தமிழ் கோ ஆப் டெக்ஸ் எஸ்.பி.ரமேஷ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் கந்தசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் , பொதுமக்கள்,  அரசு அதிகாரிகள் , மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் செய்திக்காக மாவட்ட செய்தியாளர்.என்.நரசிம்ம மூர்த்தி.

No comments:

Post a Comment