மின் கசிவால் தீ விபத்தில் வீட்டிலிந்தவருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 March 2023

மின் கசிவால் தீ விபத்தில் வீட்டிலிந்தவருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.


ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,  கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட தாசரிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் கொமரன் மனைவி கருப்பாள், என்பவர் வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் துணிகள் எரிந்து சேதம் அடைந்தது, தகவல் அறிந்த கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். சரவணன் பாதிக்கப்பட்ட நபரை நேரில் சென்று பார்வையிட்டு, தன் சொந்த நிதியில் இருந்து அரிசி மற்றும் மளிகை சாமான்கள் மற்றும் ரொக்கமாக ரூபாய் 2000 வழங்கி ஆறுதல் கூறினார்.

மேலும் வருவாய் துறை மூலமாக பேரிடர் மேலாண்மை நிதி உதவி பெற்று தருவதாக கூறினார், உடன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ்,  ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் குருநாதாள், வடிவேலு ரங்கராஜ், வளர்ச்சிக் குழு உறுப்பினர் ராசு, வக்கீல் பழனிச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.


- மாவட்ட செய்தியாளர் என். நரசிம்மமூர்த்தி. 

No comments:

Post a Comment