ரசாயன கலந்த கழிவு நீரால் பாதிப்பு ஏற்படுவதாக நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் புகார் மனு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 March 2023

ரசாயன கலந்த கழிவு நீரால் பாதிப்பு ஏற்படுவதாக நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் புகார் மனு.


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான பேப்பர் மில்லில் இருந்து வெளியேறும் ரசாயன கலந்த கழிவு நீரால் பாதிப்பு ஏற்படுவதாக நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் புதூர் என்ற கிராமத்தில் சுமார் 700 விவசாயிகள் வசித்து வருகின்றனர் இங்கு இவர்கள் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர் அதோடு ஆடு மாடு போன்ற கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர் இந்த நிலையில் இந்த ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பவளாம்பிகை பேப்பர் போர்ட் என்ற தனியாருக்கு சொந்தமான காகித ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.


இந்த ஆலையிலிருந்து சுத்திகரிப்பு செய்யப்படாத ரசாயனம் கலந்த கழிவுநீர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும் கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளிலும் கழிவுநீர் கலப்பதால் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்படுவதோடு அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும் ஆடு மாடு போன்ற கால்நடைகளுக்கும் நோய் ஏற்பட்டு பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளித்தனர்


அதோடு சம்பந்தப்பட்ட ஆலையிலிருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழுவி நீரை பாடலில் பிடித்து வந்து ஆட்சியரிடமும் அதிகாரிகளிடமும் காண்பித்து சம்பந்தப்பட்ட ஸ்ரீ பவளாம்பிகை பேப்பர் மில்லி நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர் இதில் அதிக அளவில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வந்து முறையிட்டதால் குறைதீர் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


- மாவட்ட செய்தியாளர்.என்.நரசிம்ம மூர்த்தி. 

No comments:

Post a Comment