நொய்யல் திருவிழா 2023 முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 April 2023

நொய்யல் திருவிழா 2023 முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் ஆலோசனை கூட்டம்.


அகில பாரத சன்னியாசிகள் சங்கம், நொய்யல் ஆறு டிரஸ்ட், பேரூர் ஆதீனம்- சிரவை ஆதீனம்  குரு மகா சன்னிதானங்களின் அருள் ஆசியுடன், ஆற்றல் பவுண்டேஷன்  ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள அறுபத்து மூவர் மடம்,  சமரச சுத்த சன்மார்க்க  சங்கத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பற்றி   கலந்துரையாடல் நிகழ்ச்சி   ஈரோடு மாவட்டம் சோளாங்கபாளையத்தில் உள்ள ஆற்றல் பவுண்டேஷன் அலுவலகத்தில்  ஒருங்கிணைப்பாளர் தலைமையில், பொறுப்பாளர்களுடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும்  வருகின்ற ஜூலை மாதம்  இறுதியில்  நொய்யல் அம்மன் ரத விழா  வருவதை முன்னிட்டு அந்த நிகழ்ச்சியை பற்றி கலந்துரையாடலும், மேலும் கடைசி மூன்று நாட்கள்  நொய்யல் ஆறும் காவிரி ஆறும் சேரக்கூடிய இடத்தில் இரண்டு ஆறுகளுக்கும் புஷ்கரணி விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை பற்றியும்  கலந்துரையாடல்  நொய்யல் கிராமத்தில்  நேரிலேயே சென்று மஹா ஸ்ரீ ஸ்ரீ யுக்தேஸ்வர், ஒருங்கிணைப்பாளர் - நொய்யல் பெருவிழா அவர்கள் தலைமையில், மதிப்பிற்குரிய ஆற்றல் பவுண்டேஷனின் நிறுவனர் ஆற்றல் அசோக்குமார், ஆர். வித்யாசாகர், பொறுப்பாளர்கள் - நொய்யல் பெருவிழா ஈரோடு சிறப்பாக நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நமது ஈரோடு ஆற்றல் பவுண்டேஷன் சிறப்பாக ஏற்பாடு  செய்தார்கள்.


- தமிழக குரல் செய்திகளுக்காக  கொடுமுடி செய்தியாளர் பூபாலன்.

No comments:

Post a Comment