தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 April 2023

தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.


ஈரோடு மாவட்டம் ஈரோடு மாவட்டத்தின் சார்பாக தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம். ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவி சமையலர் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

  1. காலை சிற்றுண்டி திட்டம் சத்துணவு ஊழியர்கள் கொண்டு செயல்படுத்த வேண்டும்.
  2. காலிப்பணியிடங்கள்உடனே நிரப்பிட வேண்டும். 
  3. சட்ட பூர்வ ஓய்வு ஊதியம் ரூ. 7500 வழங்க வேண்டும். 
  4. சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60லிருந்து62ஆக உயர்த்த வேண்டும். 
  5. அரசு மானியம் மாதம் மாதம் முன்பணமாக வழங்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர். என். நரசிம்மமூர்த்தி. 

No comments:

Post a Comment