ஒரு மணி நேரம் மேலாக அரசு பேருந்தில் ஏற காத்திருந்த மாற்றுத்திறனாளி; நிற்காமல் சென்ற அரசு பேருந்துகள், பொதுமக்கள் அரசு பேருந்தை வழிமறித்து ஏற்றிவிட்ட அவலம், தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பிக்குமா!!!!??? - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 April 2023

ஒரு மணி நேரம் மேலாக அரசு பேருந்தில் ஏற காத்திருந்த மாற்றுத்திறனாளி; நிற்காமல் சென்ற அரசு பேருந்துகள், பொதுமக்கள் அரசு பேருந்தை வழிமறித்து ஏற்றிவிட்ட அவலம், தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பிக்குமா!!!!???

ஈரோடு மாவட்டம் மாநகராட்சி கருங்கல்பாளையம் மஞ்ச மண்டி பேருந்து நிறுத்தத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொலைதூரப் பேருந்தில் பயணம் செய்ய வெங்கடேஷ் என்கின்ற மாற்றுத்திறனாளி 90% பாதிக்கப்பட்டவர்  பகல் 1.46 மணி வரை இவ் வழியாக வந்த தொலைதூர அரசு பேருந்துகளை நிறுத்த முற்பட்டபோது எந்த ஒரு அரசு பேருந்தும் நிற்காமல் சென்றதால் ஏற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு சோர்ந்து காணப்பட்டார். 

இவ் வழியாகச் சென்ற பொது மக்களில் ஒரு சிலர் நிற்காமல் சென்ற அரசு பேருந்தினை பள்ளிபாளையம் வரை சென்று வழிமறித்து வெங்கடேஷ்  என்பவரை ஏற்றி விட்டனர். "ஏன்? மாற்றுத்திறனாளிகளை அரசு பேருந்துகளில் ஏற்ற மறுக்கிறீர்கள்" என்று நடத்துனரிடம் கேட்டபோது "நேரம் இன்மை காரணமாகவே செல்கிறோம்" என்று மழுப்பலாகவே பதில் வழங்கினார். எனவே இத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், 


போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களும்  இனி தமிழ்நாட்டில் எந்த ஒரு பேருந்து நிறுத்தத்தில் இருந்தோ வழி தடத்திடத்தில் இருந்தோ மாற்றுத்திறனாளிகள் தொலைதூர அரசு பேருந்துகளையோ மாநகர, நகர அரசு பேருந்துகளையோ நிறுத்த கை காட்டினால் கட்டாயம் நிறுத்தி மாற்றுத்திறனாளிகளை ஏற்றிச் செல்ல அதிரடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதே மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

No comments:

Post a Comment