கருங்கல்பாளையம் டிவைன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 37-ம் ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 April 2023

கருங்கல்பாளையம் டிவைன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 37-ம் ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது.


ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் அமைந்துள்ள டிவைன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 37-ம் ஆண்டு Pre.Mont வகுப்பு முதல் Mont-II வகுப்புகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் விழாவிற்கு முன்னாள் மாமன்ற உறுப்பினர் மற்றும் கருங்கல்பாளையம் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.R.P.சந்திரசேகர் அவர்களும் சிங்கப்பூர் மூத்த பத்திரிக்கை ஆசிரியர் 'சொற்சித்தர்' மெய்ஞானச்செல்வர், V.புருஷோத்தமன் அவர்களும் S.M.சுந்தரமூர்த்தி பள்ளி தாளாளர் அவர்களும் மற்றும் சண்முககாந்தி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு  குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்து குழந்தைகளின் நிறமைகளை பாராட்டி பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.

மேலும் பள்ளி குழந்தைகள் இச்சிறுவயதில் கண்களை கட்டிக்கொண்டு படிப்பதும், மிதிவண்டி ஓட்டுவதும், சதுரங்கம் விளையாடுவதும், இரண்டு கைகளிலும் எழுதுவதும், fruit salad தயாரிப்பதும் இவ்விழாவிற்கு வருகைப்புரிந்த விருந்தினர்களையும் அனைத்து பெற்றோர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. 

No comments:

Post a Comment