ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (26.04.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில், கீழ்பவாளி திட்ட பிரதான கால்வாய் விரிவாக்குதல், புதுப்பித்தல், பழுது நீக்குதல் மற்றும் நவீனப்படுத்துதல் தொடர்பாக விவசாயிகளுடனான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயில் விரிவாக்குதல், புதுப்பித்தல், பழுது நீக்குதல் மற்றும் நவீனப்படுத்துதல் தொடர்பாக விவசாயி பெருங்குடி மக்களுடனான கருத்துக் கேட்பு கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் அவர்களுக்கு உள்ள கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்களை பொறுத்த வரை பழைய கட்டுமான பணிகளை துவங்குவதிலே எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்திருக்கிறார்கள்.
நீர்வளத்துறையின் சார்பாக பழைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வாய்க்கால்களின் கதவனைகளின் (சட்டர்) பழுதுகளை நீர்வளத்துறை அலுவலர்கள் முறையாக ஆய்வு மேற்கொண்டு பழுதுகளை நீக்க வேண்டுமெனவும் அவற்றில் எந்த பணிக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதனை உடனடியாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளையும் வழங்கியுள்ளனர் அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், தலைவர், புலம்பெயர் தமிழர் நலவாரியம் திரு.கார்த்திகேய சிவசேனாபதி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.என்.பொன்மணி இஆப., நீர்வளத்துறை தலைமை பொறியாளர் (கோவை மண்டலம்) திரு.பி.முத்துசாமி, கண்காணிப்பு பொறியாளர் (பவானி வடிநில கோட்டம்) திரு.கௌதமன், கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் திரு.கண்ணன், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், விவசாமிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment